561. வீறு கொண்டு எழுந்து த்ரிவிக்ரமனாக விண்ணளந்த முரளி விஜய் -IPL
1. CSK vs RCB at Chennai
தொடர்ந்து 4 தோல்விகளை சந்தித்த சென்னை, பலமான RCB அணியுடன் சேப்பாக்கத்தில் மோதியபோது, எனக்கு நம்பிக்கை இல்லை. அதுவும், 10 ஓவர்களில் 80-2 என்று RCB இருந்த நிலையில், 180 உறுதி என்று தான் தோன்றியது. துஷாரா, ஜகதி, முரளி என்று மூவரும் திறமையாக பந்து வீசியதில், RCB எடுத்தது 161 ரன்கள் மட்டுமே!
161-ஐத் சென்னை அணி துரத்தியபோது, விஜய்யின் வீறுகொண்ட ஆட்டத்தால் (ஒரு ஓவரில் பிரவீனை 26 ரன்களுக்கு விளாசினார்!), மேட்ச் நமக்கு டென்ஷன் இல்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது. விஜய் அவுட்டானபோது ஸ்கோர் 104-2 (10.5). அதில், அவர் எடுத்தது 78 ரன்கள் (39 பந்துகள், அதாவது 200% SR). தேவையான ரன்ரேட், 6.4 மட்டுமே! தோனியும், மார்க்கலும் பயங்கரமாகத் தடவி அவுட்டும் ஆனதில், ஸ்கோர் 143-4 (17.3), ரன்ரேட் 7.6, ரெய்னா இருந்தபோதும், ரென்ஷன்! (என் மனதில் பஞ்சாபுக்கு எதிரான, நாம் சூப்பர் ஓவரில் தோற்ற மேட்ச் நிழலாடியது) :-)
பத்ரி & ரெய்னா, 2 ஓவர்கள், 16 ரன்கள் தேவை. 4 பந்துகளில் 6 ரன் எடுத்து, 5வது பந்தில், பத்ரி அனாவசிய அவுட்! இப்போது, 7 பந்துகள், 10 ரன் தேவை! "பஞ்சாபிய" துர்சொப்பனம் பயமுறுத்தியவண்ணம் இருந்தது! வினய்குமார் என்ற மிக நல்லவர் நோ பால் வீச, ரெய்னா ஸ்டம்பை விட்டு நகர்ந்து, கவர் மேல் பந்தை தூக்கியடித்தார், Shot of the day, சிக்ஸர்! சென்னை ரசிகர்களின் பிரஷர் சர்ரென்று குறைந்தது :)
7 பந்துகளில், 3 ரன்கள் தேவை. மீண்டும் நோ பால், 2+1 ரன்கள், சென்னைக்கு மிகத் தேவையாய் இருந்த ஒரு வெற்றி கிட்டியது, அதுவும் ஒரு பலமான அணியுடன்! ஏதோ ரன் கணக்கு குளறுபடியில், இன்னொடு பந்து வீசப்பட்டு, ரெய்னா இன்னொரு பவுண்டரி அடித்து வெற்றியை இன்னொரு முறை கன்பர்ம் செய்தார், சுபம் :-)
2. CSK vs RR at Chennaiசென்ற மேட்சில் வீறுகொண்டு எழுந்த விஜய், இந்த மேட்சில், த்ரிவிக்ரமவதார வாமனன் விஸ்வரூபமெடுத்து விண்ணளந்தது போல, ஒரு ஆட்டம் ஆடியது கண் கொள்ளாமல் இருந்தது என்றால் அது மிகையில்லை!
இது போன்ற அதிரடியை இதுவரை சேப்பாக்கம் பார்த்ததில்லை என்று நிச்சயமாகக் கூறலாம்! விஜய் ஆடிய காஸ்மிக் நடனத்தால் (127 ரன்கள், 56-ஏ பந்துகளில், SR 227%)சென்னை, IPL-ன் அதிகபட்ச மொத்த ரன் எண்ணிக்கையை (246) எட்டியது. நூறு அடித்த ஒரு பேட்ஸ்மன் பவுண்டரிகளை விட சிக்ஸர்கள் நிறைய அடிப்பது எப்போதும் நிகழ்வதில்லை. விஜய் அடித்தது, 11 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் (98 ரன்கள்!!!)
ராஜஸ்தானை எளிதாக வென்று விடலாம் என்று தான் மொத்த சென்னையும் எண்ணியது. ஆனால், RR-ன் பதிலடி spectacular என்ற வகையில் அமைந்தது. பாலிங்கரைத் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் (முரளியும் சேர்த்து!) எல்லாரும் நையப்புடைக்கப்பட்டார்கள்!15வது ஓவர் முடிவில், RR 175-2. வாட்சனும் (60, 24 பந்துகள்), ஓஜாவும் (65, 38 பந்துகள்) பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருந்தனர். அதனால், பிரதி ஓவர் 14.4 ரன்கள் என்பது எட்டக்கூடிய இலக்காகவே தோன்றியது!
தனது முதல் 2 ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த பாலிங்கர் பந்து வீச வந்தார்! ஒரு நோ பாலுடன் ஆரம்பித்தாலும், அடுத்த பந்தில், வாட்சனை clean bowled செய்தார். இது தான் மேட்சின் திருப்புமுனை, அதோடு அந்த ஓவரில் 8 ரன்களே கொடுத்தார். அடுத்த ஓவரை சிறப்பாக வீசிய ரெய்னா கொடுத்தது 9 ரன்கள். 3 ஓவர்களில் 55 ரன்கள் தேவை, போலிங்கருக்கு இன்னும் ஒரு ஓவர் இருந்த சூழலில், Match was almost sealed in favour of CSK! ரிசல்ட்: CSK 23 ரன்களில் வெற்றி
ஒன்றைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இரு அணியினரின் பந்து வீச்சாளர்களும் துவைத்துத் தொங்கவிடப்பட்ட ஒரு சூழலில், பாலிங்கர் தனது 4 ஓவர்களில் கொடுத்தது, 15-ஏ ரன்கள் (2 விக்கெட்டுகள்) !!!!! பிரதி ஓவருக்கு 4 ரன்கள் கூட இல்லை.அது மட்டுமலலாமல், ஒரு பிரமாதமான கேட்ச் பிடித்து "கிங்கரன்" பதானை வெளியேற்றி, சென்னைக்கு பெரிய அளவில் டேமேஜ் எதுவும் ஏற்படாமல் காப்பாற்றிய பெருமையும் போலிங்கருக்கே! விஜய்யின் 127க்கு சற்றும் குறைவில்லாதது, போலிங்கரின் பங்களிப்பு. மற்ற சென்னை பந்துவீச்சாளர்கள் பிரதி ஓவருக்கு வாரி வழங்கியது கீழே:
Bowling O M R W Econ
JA Morkel 4 0 56 2 14.00
S Tyagi 4 0 45 0 11.25
M Muralitharan 4 0 52 1 13.00
SB Jakati 3 0 37 0 12.33
SK Raina 1 0 8 0 8.00
ஒரே ஒரு வருத்தம் தான்! பாலாஜி அணியில் இருந்திருந்தால், அவரும் ஒரு அரை சதமாவது அடித்திருப்பார் ;-)
எ.அ.பாலா
9 மறுமொழிகள்:
Test !
// ஒரே ஒரு வருத்தம் தான்! பாலாஜி அணியில் இருந்திருந்தால், அவரும் ஒரு அரை சதமாவது அடித்திருப்பார் //
ஹாஹாஹா :) ச
Nice commentary :)
//Test !//
இல்ல பாலா. 20 - 20.
இப்போவாவது சென்னை சூப்பர்கிங்ஸ் அரையிறுதி போட்டிக்கு வரும் வாய்ப்பு உண்டா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//பாலிங்கர் தனது 4 ஓவர்களில் கொடுத்தது, 15-ஏ ரன்கள் (2 விக்கெட்டுகள்) !!!!! பிரதி ஓவருக்கு 4 ரன்கள் கூட இல்லை.
அது மட்டுமலலாமல், ஒரு பிரமாதமான கேட்ச் பிடித்து "கிங்கரன்" பதானை வெளியேற்றி, சென்னைக்கு பெரிய அளவில் டேமேஜ் எதுவும் ஏற்படாமல் காப்பாற்றிய பெருமையும் போலிங்கருக்கே! //
எனக்கென்னவோ விஜயின் பங்களிப்பைவிட ஒரு படி மேலே தெரிகிறது. சராசரிப் பந்துவீச்சாக அமைந்திருந்தால் இன்னொரு வீணாப் போன செஞ்சுரி ஆகியிருக்குமே..
///சென்னைக் கோமாளி முரளி விஜயும் ///
///த்ரிவிக்ரமனாக விண்ணளந்த முரளி விஜய் ///
நடத்து..நடத்து
Good post.
I don't why you don't like Balaji.
He is comparatively better bowler than others in CSK.
CSK's chances are very tough due to RR's win yesterday.
Why do you people support players just because the team name is "Chennai"? We have been supporting Dravid, Sachin, Kumble, Ganguly, Sehwag for years.. and suddenly you people support some new players against these people?
Post a Comment